முல்லைத்தீவில் பாடசாலை மாணவனை தாக்கிய ஆசிரியர்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவனை தாக்கிய ஆசிரியர்

முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவனை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் தாக்கியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் மண்வெட்டியை எடுத்து வருமாறு மாணவன் ஒருவருக்கு கூறியுள்ளார்.

மண்வெட்டியை குறித்த மாணவன் எடுக்காத நிலையில் அருகில் இருந்த மாணவன் மண்வெட்டியை எடுத்துச் சென்ற நிலையில் மற்றைய மாணவனை ஆசிரியர் தாறுமாறாக தாக்கியுள்ளார்.

காயம் அடைந்த மாணவனை பெற்றோர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு வழங்கி உள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஆசிரியரை கைது செய்த பொலிஸார் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
CATEGORIES
Share This

COMMENTS